பிளாஸ்மாவை தானமாக வழங்கிய ஜோவா மோரானி


பிளாஸ்மாவை தானமாக வழங்கிய ஜோவா மோரானி
x
தினத்தந்தி 11 May 2020 11:37 AM IST (Updated: 11 May 2020 11:37 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மாவை ஜோவா மோரானி தானமாக வழங்கி உள்ளார்.

மும்பை,

சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கரீம் மோரானி மற்றும் அவரது மகள்கள் ஜோவா மோரானி மற்றும் ஷாஜா மோரானி ஆகியோர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு பின் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பினர்.

நடிகை ஜோவா மோரானி  ஷாருக்கானின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ஓம் சாந்தி ஓம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். மேலும் மஸ்தான், பாக் ஜானி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இவர் டிஜிட்டல் பிளாட்பார்மில் ஜி5வின் அகூரி மற்றும் பூத் பூர்வாவில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து கொரோனாவினால் பாதிக்கப்பட்டவருக்கு பிளாஸ்மா தெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

இந்நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட இந்தி நடிகை ஜோவா மோரானி ரத்த பிளாஸ்மாவை, தானமாக வழங்கி உள்ளார்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு, பிளாஸ்மா தெரப்பி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு பயன்படும் வகையில், ஜோவா மோரானி ரத்த பிளாஸ்மாவை தானமாக வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஜோவா மோரானி சமூக வலைதளத்தில் கூறியதாவது:-

பரிசோதனைகளுக்காக எனது இரத்தத்தை நன்கொடையாக அளித்தேன். இது மிகவும் கவர்ச்சிகரமானதாக இருந்தது என்று கூறினார். மேலும் தன்னை கவனித்துக்கொண்ட டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், பிளாஸ்மாவை தானமாக வழங்குவதன் மூலம் நோயாளிகள் பயனடைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு, பிளாஸ்மா தெரப்பி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு பயன்படும் வகையில், ஜோவா மோரானி ரத்த பிளாஸ்மாவை, தானமாக வழங்கி உள்ளார்.

Next Story