அம்மாவின் புகைப்படத்தை பகிர்ந்த விஜய் பட ஹீரோயின்
நடிகை மாளவிகா மோகனன் அவரது அம்மாவின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னை,
'பியாண்ட் த கிளவுட்ஸ்'படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடி சேர்ந்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அடங்கியதும் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் அன்னையர் தினமான நேற்று தனது அம்மாவிற்கு வாழ்த்து கூறிய நடிகை மாளவிகா மோகனன், மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழாவின் போது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோவை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
Related Tags :
Next Story