'கார்த்திக் டயல் செய்த எண்' டீசரை டுவிட்டரில் பகிர்ந்த த்ரிஷா
கார்த்திக் டயல் செய்த எண் என குறும்பட டீசரை த்ரிஷா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
சென்னை,
நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். காதலர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அந்த படம் பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனையை படைத்தது.
அண்மையில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 10வது ஆண்டு விழாவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து கொண்டாடி வந்தனர். இயக்குநர் கெளதம் மேனன், நடிகை திரிஷா உள்ளிட்டோர் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த கொரோனா ஊரடங்கில் சில நாட்களுக்கு முன்பு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் த்ரிஷா ஒரு குறும்படத்தில் நடித்து வந்தார். முழுக்க கவுதம் வாசுதேவ் மேனன் தொலைபேசியில் வீடியோ கால் மூலமாக சொல்ல, அதை வீட்டிலிருந்தபடியே ஷுட் செய்து அனுப்பினார். தற்போது அந்தக் குறும்படத்துக்கு 'கார்த்திக் டயல் செய்த எண்' என்று பெயரிடப்பட்டு, டீஸரை வெளியிட்டுள்ளனர்.
'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் ஜெஸ்ஸி கதாபாத்திரம் கார்த்திக் கதாபாத்திரத்திடம் தொலைபேசியில் பேசுவது போல் இதன் டீஸர் அமைந்துள்ளது. பின்னணியில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இசையுடன் இந்த டீஸர் முடிவடைகிறது. இந்த டீஸர் 'விண்ணைத்தாண்டி வருவாயா' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கார்த்திக் டயல் செய்த எண்https://t.co/LtleOhGBVx
— Trish (@trishtrashers) May 10, 2020
Related Tags :
Next Story