சினிமா செய்திகள்

ஊரடங்கில் சமையல் கற்றேன் - காஜல் அகர்வால் + "||" + I learned cooking at Curfew - Kajal Agarwal

ஊரடங்கில் சமையல் கற்றேன் - காஜல் அகர்வால்

ஊரடங்கில் சமையல் கற்றேன் - காஜல் அகர்வால்
கொரோனா ஊரடங்கில் சமையல் கற்றுக்கொண்டதாக நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
சென்னை,

கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் நடிகை காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

“நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. இந்த காலகட்டத்தில் வீட்டில் அதிக நாட்கள் இருந்தது இதுதான் முதல் தடவையாகும். குடும்பத்தோடு நேரத்தை கழித்துக்கொண்டு இருக்கிறேன். அம்மா, அப்பாவுடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஊரடங்கு நேரத்தை வீணாக்கவில்லை. எல்லோரும் கொரோனா கஷ்ட காலத்தில் பயத்துடன் மூச்சை கையில் பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். கொரோனா பாதிப்பில் இருந்து எப்படியாவது மீள வேண்டும். மீள்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் அம்மாவுக்கு நெருக்கம். நான் இந்த நிலைக்கு வந்ததற்கு காரணம் எனது அம்மாதான். என்னை சரியான பாதையில் வழி நடத்தினார்.

எனக்கு சமையல் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ரொம்ப ஆண்டுகளாக அவர் முயற்சி செய்து கொண்டே இருந்தார். ஆனால் எனக்கு நேரம் இல்லை. எப்போதுதான் கற்றுக்கொள்ள போகிறாயோ? என்று கூறிக்கொண்டே இருப்பார். இப்போது கொரோனா ஊரடங்கில் அம்மாவிடம் சமையல் கற்றுக்கொள்கிறேன். சமையல் அறை பொறுப்பையும் எடுத்துக்கொண்டேன். இதை பார்த்து அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். கொரோனா ஊரடங்கில் 2 மாதமாக அம்மாவுடன் சேர்ந்து இருப்பது அவருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது”.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தொழில் அதிபருடன் 30-ந்தேதி திருமணம் காஜல் அகர்வால் அறிக்கை
தொழில் அதிபருடன் 30-ந்தேதி திருமணம் என நடிகை காஜல் அகர்வால் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.