ஊரடங்கில் நடுரோட்டில் கணவருடன் நடனமாடிய நடிகை ஸ்ரேயா


ஊரடங்கில் நடுரோட்டில் கணவருடன் நடனமாடிய நடிகை ஸ்ரேயா
x
தினத்தந்தி 12 May 2020 3:50 PM IST (Updated: 12 May 2020 3:50 PM IST)
t-max-icont-min-icon

பார்சிலோனாவில் ஊரடங்கு அமலில் இருக்கும் போது நடுரோட்டில் கணவருடன் நடிகை ஸ்ரேயா நடனமாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியது.

பார்சிலோனியா,

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதனை தொடர்ந்து அவர் தமிழில், மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரெளத்ரம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.  இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதனிடையே பிரபல தொழிலதிபருமான ஆன்ட்ரே கோஷ்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு ஸ்ரேயா கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஸ்ரேயாவும் அவரது கணவரும் பார்சிலோனா நகரில் நடுரோட்டில் மாஸ்க் எதுவும் அணியாமல் நடனம் ஆடியுள்ளனர்.

மேலும் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டான்ஸ் மாஸ்டர்களுக்கு நன்றிகூறி வெளியிட்டுள்ளார். பார்சிலோனாவில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஸ்ரேயா நடுரோட்டில் கணவருடன் நடனமாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story