தமன்னாவை ஆச்சரியப்படுத்திய ரசிகர்கள்
புது புது விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகம் என நடிகை தமன்னா கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, கொரோனா ஊரடங்கையொட்டி இணையதளத்தில் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்று சினிமா அனுபவங்கள் பற்றி கூறியதாவது:-
“எனக்கு சிறுவயதில் இருந்தே புது புது விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகம். இப்போது ஊரடங்கில் புதிதாக நிறைய கற்று வருகிறேன். எனது அம்மாவிடம் இருந்து நமது பண்பாடு கலாசார முறைகளை தெரிந்து கொள்கிறேன். எனது தாய்மொழி சிந்தி, ஆனால் எனக்கு அந்த மொழி தெரியாது. தெலுங்கு, தமிழ் மொழிகளை புதிதாக கற்று நன்றாக பேசுவேன். இப்போது கொரோனா ஊரடங்கில் எனது அம்மாவிடம் சிந்தி கற்றுக்கொண்டு வருகிறேன். இந்த ஆண்டு முடிவதற்குள் தாய்மொழியில் நன்றாக பேசிவிட லட்சியம் வைத்துள்ளேன். அதோடு சமையலிலும் எனது அம்மாவிடம் நிறைய கற்று வருகிறேன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரையுலக ரசிகர்களின் வாழ்க்கையில் சினிமா முக்கிய அங்கமாக இருக்கிறது. திரைப்படங்களை கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே அவர்கள் பார்க்கின்றனர். இது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. தமிழில் விஜய், அஜித்குமாருடன் நடித்து விட்டேன். இருவருக்கும் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவர்கள் இப்போதைய தலைமுறையினரை மட்டுமன்றி அடுத்த தலைமுறையினரையும் சந்தோஷப்படுத்தும் நடிகர்களாக இருக்கிறார்கள்”.
இவ்வாறு தமன்னா கூறினார்.
Related Tags :
Next Story