மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு உணவு ஊட்டிய பெண் போலீஸ்; பாராட்டிய நடிகர் சிரஞ்சீவி


மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு உணவு ஊட்டிய பெண் போலீஸ்; பாராட்டிய நடிகர் சிரஞ்சீவி
x
தினத்தந்தி 13 May 2020 6:55 AM GMT (Updated: 13 May 2020 6:55 AM GMT)

ஒடிசாவில் மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு பெண் போலீஸ் ஒருவர் உணவு ஊட்டியதை நடிகர் சிரஞ்சீவி பாராட்டி உள்ளார்.

ஐதராபாத்,

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் காவலர் சாலையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்குச உணவு ஊட்டிவிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்தநிலையில், நடிகர் சிரஞ்சீவி சுபஸ்ரீயிடம் தொலைபேசியில் வீடியோ காலில் பேசி தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார் 

இந்த வீடியோ பதிவையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்  நடிகர் சிரஞ்சீவி பேசியதாவது:-

சில நாட்களுக்கு முன்பு, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நீங்கள் சாப்பாடு ஊட்டிவிடும் காணொலியைப் பார்த்தேன்.

அது என் கவனத்தை ஈர்த்தது. அதைக் கண்டு என் மனம் நெகிழ்ந்து விட்டது. அப்போதிலிருந்தே உங்களிடம் பேச வேண்டும் என்று முயற்சி செய்தேன். உங்களைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த மனிதரிடம் நீங்கள் காட்டிய விதம் மகிழ்ச்சியைத் தந்தது.

உங்களிடம் ஒரு இரக்கமுள்ள அன்னையைப் பார்த்தேன். நிறையப் பேருக்கு உந்துதலாக இருக்கிறீர்கள். கண்டிப்பாக உலகத்தின் பல்வேறு மூலைகளிலிருந்து உங்களுக்குப் பாராட்டு கிடைத்திருக்கும். உங்களிடம் பேசியதில் மிக்க மகிழ்ச்சி. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என இவ்வாறு அந்த உரையாடல் முடிவடைகிறது.

Next Story