முன்னாள் நக்சலைட் ஒருவரிடம் பயிற்சி எடுக்க உள்ள சாய்பல்லவி!
நடிகை சாய்பல்லவி, நக்சலைட் வேடத்திற்காக, முன்னாள் நக்சலைட் ஒருவரிடம் பயிற்சி எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சாய்பல்லவி. அவர் நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. அதன்பிறகு தமிழ், தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்தன. கதாநாயகிக்கு முக்கியத்துவமான கதைகளை தேர்வு செய்து நடித்தார். தமிழில் தியா படத்தில் குழந்தைக்கு தாயாக வந்தார்.
அதன்பிறகு தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதில் ஆட்டோ டிரைவர் வேடம். இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. தமிழில் சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்த சாய் பல்லவி, அதன்பிறகு தெலுங்கில் ராணாவுடன் விரத பர்வம் 1992, நாகசைதன்யாவுடன் லவ் ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் விரத பர்வம் 1992 படத்தில் ராணா போலீஸ் அதிகாரியாகவும், சாய் பல்லவி நாட்டுப்புற பாடகராக இருந்து பின்னர் நக்சலைட்டாக மாறும் வேடத்திலும் நடிக்கிறார். சமீபத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்தப்படத்தில் சாய் பல்லவியின் கேரக்டர் லுக் போஸ்டர் ஒன்று வெளியானது. இதுவரை பக்கத்து வீட்டுப்பெண் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த சாய்பல்லவி இந்தப்படத்தில் நக்ஸலைட்டாக நடிக்கிறார்.
பாடுவதில் தீராத ஆர்வம் கொண்ட ஒரு பெண் எதிர்பாராத சூழலால் எப்படி நக்சலைட் இயக்கத்தில் சேருகிறாள் என்பதுதான் படத்தின் கதையாம். இதற்காக படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ள முன்னாள் நக்சலைட் ஒருவரிடம் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான பயிற்சி எடுத்துக்கொள்ள சாய்பல்லவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story