"கடினமான உழைப்பாளி" 25 ஆண்டுகால உடன் இருந்த அமீர்கானின் உதவியாளர் உயிரிழப்பு
இந்தி நடிகர் அமீர்கானின் 25 ஆண்டுகால உடன் இருந்த உதவியாளர் அமோஸ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
மும்பை,
இந்தி நடிகர் அமீர்கானின் உதவியாளரான அமோஸ் நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கிழே சரிந்து விழுந்தார், உடனடியாக அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த 25 வருடங்களாக அமீர்கானின் உதவியாளராக அமோஸ் இருந்து வந்தவர். அமோஸ் உயிரிழந்த தகவலை அமீர்கானின் நண்பர் ஹரீம் உறுதிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள அவர், அமோஸ் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அமீர்கான் அதிர்ச்சியடைந்தார். அமோஸின் உயிரிழப்பு தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு என அமீர்கான் வருத்தம் தெரிவித்தார்.
உதவியாளர் என்பதையும் தாண்டி அமீர்கானின் குடும்பத்தில் ஒருவராகவே அமோஸ் இருந்தார். அமோஸ் ஒரு சூப்பர் ஸ்டாருடன் பணிபுரிந்தார், ஆனால் அன்பானவர், எளிமையானவர். அவர் அமீருக்கு மட்டுமல்ல அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். கடினமான உழைப்பாளி என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story