சினிமா செய்திகள்

“நீ நினைக்கும் அனைத்தும் அடைவாய்”நடிகை சன்னி லியோனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கணவர் + "||" + How Birthday Girl Sunny Leone's Day Was Made Special By Husband Daniel Weber

“நீ நினைக்கும் அனைத்தும் அடைவாய்”நடிகை சன்னி லியோனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கணவர்

“நீ நினைக்கும் அனைத்தும் அடைவாய்”நடிகை சன்னி லியோனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கணவர்
நடிகை சன்னி லியோன், பிறந்த நாளை முன்னிட்டு பதிவிட்டுள்ள வீடியோவில் வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
நியூயார்க்,

ஆபாச பட நடிகையான சன்னிலியோன், தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் ‘வீரமாதேவி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்தியிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். பட வாய்ப்புகள் அதிகம் வந்ததால் இந்தியாவிலேயே குடியேறினார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால், இங்கிருந்து வெளியேறி கணவர் டேனியல் வெபர் மற்றும் 3 குழந்தைகளுடன் அமெரிக்கா சென்று விட்டார். அங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தோட்டத்துடன் கூடிய தனது வீட்டில் குடியேறி இருக்கிறார். மற்ற நாடுகளை விட அமெரிக்காவில்தான் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ளன. ஆனாலும் சன்னி லியோன் குடியிருக்கும் வீடு கொரோனா பாதிப்புகள் இல்லாத பகுதியில் அமைந்துள்ளது.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் இன்று தனது 39-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் இணையத்தில் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சன்னி லியோன், பிறந்த நாளை முன்னிட்டு பதிவிட்டுள்ள வீடியோவில் வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.