படங்கள் ஓடாவிட்டால் நடிகர்களை குறை சொல்லக்கூடாது - பிரியாமணி
படங்கள் ஓடாவிட்டால் நடிகர்களை குறை சொல்லக்கூடாது என நடிகை பிரியாமணி கூறியுள்ளார்.
சென்னை,
தமிழில் பருத்திவீரன் படத்தில் தேசிய விருது பெற்ற பிரியாமணி, தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ராணாவுடன் விராட பருவம் படத்தில் நடித்து வருகிறார்.
இது நக்சலைட்டுகள் பற்றிய கதை என்றும், பிரியாமணி பெண் நக்சலைட்டாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்தியில் அஜய்தேவ்கானுடன் மைதான் படத்திலும் நடிக்கிறார். தற்போது ஊரடங்கு நேரத்தை குடும்பத்துடன் கழிக்கிறார்.
பிரியாமணி கூறியதாவது:-
“எனது வாழ்க்கையில் பருத்திவீரன், சாருலதா, மலையாளத்தில் திரைக்கதா ஆகிய 3 படங்களையும் மறக்க முடியாது. இந்த படங்களில் எனது கதாபாத்திரம் சவால் நிறைந்ததாக இருந்தன. ஒவ்வொரு படத்திலுமே கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்தேன். படங்கள் ஓடியதா, இல்லையா என்பது பற்றி கவலை இல்லை. படம் ஓடவில்லை என்றால் அதில் நடித்த நடிகர்-நடிகைகளை குறை சொல்லக் கூடாது.
கதை கேட்கும்போது நன்றாக போகும் என்றுதான் படத்தை ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் படம் வெளியாகும்போது சில மாற்றங்கள் இருக்கும். ஊரடங்கில் கணவர் முஸ்தபா வீட்டில் இருக்கிறேன். திருமணத்துக்கு பிறகு இப்போதுதான் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுகிறேன். சமையல் செய்கிறேன். திரைப்படங்கள், வெப் தொடர்களும் பார்க்கிறேன்”.
இவ்வாறு பிரியாமணி கூறினார்.
Related Tags :
Next Story