போலீசில் புகார் செய்வேன் ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை - நடிகை அனுமோள்
போலீசில் புகார் செய்வேன் ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை தருவதாக நடிகை அனுமோள் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழில் கண்ணுக்குள்ளே, ராமர், திலகர், ஒரு நாள் இரவில், சூரன் ஆகிய படங்களில் நடித்தவர் அனுமோள். கேரளாவை சேர்ந்த இவர் மலையாளத்தில் சாயில்யம், அகம், வெடிவழிபாடு, ராக் ஸ்டார், பிரமோஸ்தரம் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது 4 மலையாள படங்களில் நடித்து வருகிறார். ஒரு பெங்காலி படத்திலும் நடிக்கிறார். இந்த நிலையில் அனுமோளுக்கு சமூக வலைத்தளம் மூலம் சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
“சிலர் தங்களின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளம் மூலம் எனக்கு அனுப்புகிறார்கள். அவர்கள் என்னை பின்தொடராமல் இருக்க சமூக வலைத்தளத்தில் தடை செய்து நான் சோர்வடைந்து விட்டேன். ஒருவர் தனது ஆபாச வீடியோக்களை வெவ்வேறு கணக்கில் இருந்து எனக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறார். இப்படி அந்தரங்க புகைப்படங்களையும், ஆபாச வீடியோக்களையும் அனுப்பி தொல்லை கொடுப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். இனியும் தொடர்ந்து செய்தால் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து சட்ட நடவடிக்கை எடுப்பேன். இதுபோன்ற ஆபாச படங்களை அனுப்பினால் பெண்களுக்கு அறுவெறுப்புத்தான் வரும். வேறு எந்த உணர்வும் ஏற்படாது”.
இவ்வாறு அனுமோள் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story