இடிபாடுகளுக்கு இடையில் பூச்செடி வளர்வது போன்று நாமும் மீண்டு வருவோம் - நடிகர் விவேக்


இடிபாடுகளுக்கு இடையில் பூச்செடி வளர்வது போன்று நாமும் மீண்டு வருவோம் - நடிகர் விவேக்
x
தினத்தந்தி 14 May 2020 11:32 AM IST (Updated: 14 May 2020 11:32 AM IST)
t-max-icont-min-icon

இடிபாடுகளுக்கு இடையில் பூச்செடி வளர்வது போன்று நாமும் மீண்டு வருவோம் என நடிகர் விவேக் கூறியுள்ளார்.

சென்னை,

நடிகர் விவேக், கடந்த சில ஆண்டுகளாகவே டுவிட்டரில் சமூக கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். தற்போதைய கொரோனா குறித்து ஒருசில விழிப்புணர்வு வீடியோக்களை சமீபத்தில் வெளியிட்டார். இந்த வீடியோக்கள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒருசில தனிப்பட்ட காரணங்களுக்காக சமூக வலைத்தளத்தில் இருந்து சில நாட்களுக்கு மட்டும் விலகுவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். 

இந்தநிலையில் கடந்த வாரம் அவர் மீண்டும் டுவிட்டருக்கு திரும்பினார். அன்னையர் தினத்தில் வாழ்த்துக்களை தெரிவித்தார். சில நாட்கள் இடைவெளிக்கு பின், மீண்டும், 'டுவிட்டர்' பக்கம் வந்த நடிகர் விவேக் டுவிட்டர் பதிவில்,

'சுகாதார அறிவுறுத்தலை கடைப்பிடிப்பதும் ஒரு சிகிச்சையே' எனக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

இடிபாடுகளுக்கு இடையில், பூச்செடி வளர்வது போல் நாமும் மீண்டு வருவோம். குப்பைக்கு மத்தியில் ரோஜாக்களை போல் எழுந்திருப்போம். நம்பிக்கையே எங்கள் உரம். சுகாதார அறிவுறுத்தலை கடைப்பிடிப்பதும் ஒரு சிகிச்சையே என பதிவிட்டுள்ளார்.

Next Story