லாக் டவுனில் ரித்திகா சிங்கை கையால் துணியை துவைக்க வைத்த அம்மா!
லாக் டவுனில் நடிகை ரித்திகா சிங் துணி துவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
சென்னை,
கொரோனா ஊரடங்கு காலத்தை பலரும் பலவிதமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதுவரை சுடுதண்ணீர் கூட வைக்கத் தெரியாத நடிகைகள் சமையலில் நிபுணர் ஆகும் அளவிற்கு சமையல் கற்றுக் கொண்டுள்ளார்கள். தாங்கள் குடித்த காபி கப்பைக் கூட கழுவாதவர்கள், வீட்டில் சமைத்த சமையல் பாத்திரங்களை கழுவ ஆரம்பித்துவிட்டார்கள்.
சில நடிகைகள் அவர்களின் நடிப்புத் தொழிலுக்கு உதவியான விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். கொரோனா ஊரடங்கில் சமையல் கற்றுக்கொண்டதாக நடிகை காஜல் அகர்வால் கூறி இருந்தார்.
இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோவில்,
வீட்டு வேலைகளைச் செய்வது மற்றும் தனக்கு என்ன கிடைக்கும் என்று அம்மா எதிர்பார்க்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story