என் தயாரிப்பு நிறுவனத்தில் நடிகர், நடிகையர் தேர்வா? சல்மான்கான் மறுப்பு


என் தயாரிப்பு நிறுவனத்தில் நடிகர், நடிகையர் தேர்வா? சல்மான்கான் மறுப்பு
x
தினத்தந்தி 16 May 2020 12:24 PM IST (Updated: 16 May 2020 12:24 PM IST)
t-max-icont-min-icon

சல்மான் கான் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக எந்த நடிகர் நடிகையர் தேர்வும் நடைபெறவில்லை என நடிகர் சல்மான்கான் விளக்கம் அளித்துள்ளார்.

மும்பை,

சமீப நாட்களாக பாலிவுட்டில் ஒரு சர்ச்சை விஷயம் ஓடிக் கொண்டிருந்தது. அது என்னவென்றால் கொரோன ஊரடங்கு முடிந்ததும் நடிகர் சல்மான் கானின் தயாரிப்பு நிறுவனம், அவர்களின் அடுத்த படத்தில் நடிப்பதற்கான நடிகர்களைத் தேர்வு செய்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வர ஆரம்பித்தன. சல்மான்கான் படத்தில் நடிக்கும் ஆர்வத்துடன் பலரும் இதற்காக முயற்சி மேற்கொண்டு வந்ததாக கூறப்பட்டது. 

இதுகுறித்து சல்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

"நானோ, சல்மான் கான் பிலிம்ஸ் சார்பாகவோ யாரும் எந்த விதமான நடிகர் தேவையும் நடத்தவில்லை. எங்கள் படங்களில் நடிக்கும் நடிகர்களைத் தேர்வு செய்ய யாரையும் நியமிக்கவில்லை. அப்படியான புரளிகளைத் தாங்கி வரும் எந்த விதமான மின்னஞ்சல்களையும், செய்திகளையும் நம்பாதீர்கள். 

சல்மான் கான் பிலிம்ஸ் பெயரையோ, என் பெயரையோ அனுமதியின்றித் தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனது ரசிகர்கள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படியும் சல்மான் வலியுறுத்தியுள்ளார்.

Next Story