வலிமை படம்: பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டாம் - அஜித் அறிவுறுத்தியதாக தகவல்


வலிமை படம்: பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டாம் - அஜித் அறிவுறுத்தியதாக தகவல்
x
தினத்தந்தி 16 May 2020 1:47 PM IST (Updated: 16 May 2020 1:47 PM IST)
t-max-icont-min-icon

வலிமை படம் தொடர்பான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டாம் போனி கபூருக்கு அஜித் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

ஊழியர்களின் பாதுகாப்பு கருதி வலிமை படம் தொடர்பான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டாம் எனத் தயாரிப்பாளர் போனி கபூருக்கு அஜித் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது.  இப்படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா.

இந்நிலையில் இந்த வாரம் முதல் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழ்த் திரையுலகினருக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் படப்பிடிப்புப் பணிகளும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தநிலையில்  ஊழியர்களின் பாதுகாப்பு கருதி வலிமை படம் தொடர்பான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டாம் எனத் தயாரிப்பாளர் போனி கபூருக்கு அஜித் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Next Story