காதலியுடன் ஹாலிவுட் நடிகர் மர்ம மரணம்


காதலியுடன் ஹாலிவுட் நடிகர் மர்ம மரணம்
x
தினத்தந்தி 20 May 2020 5:52 AM IST (Updated: 20 May 2020 5:52 AM IST)
t-max-icont-min-icon

ஹாலிவுட் நடிகர் தனது காதலியுடன் மர்மமான முறையில் வீட்டில் பிணமாக கிடந்தார்.


ராபர்ட் பாட்டின்சன், கிறிஸ்டன் ஸ்டூவர்ட் ஆகியோர் நடிப்பில் ரத்தக் காட்டேரிகள் கதையம்சத்தில் 2008-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற ‘ட்வைலைட்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கிரிகரி டைரீ பாய்ஸ். அப்போகாலிப்ஸ் உள்ளிட்ட மேலும் பல படங்களிலும் நடித்துள்ளார். 30 வயதான கிரிகரி டைரீ பாய்ஸ், தனது 27 வயது காதலி நடாலியாவுடன் அமெரிக்காவில் உள்ள லாஸ் வெகாஸ் நகரில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் வீட்டில் இருந்து பிணமாக மீட்கப்பட்டு உள்ளனர். இது ஹாலிவுட் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் எப்படி இறந்தார்கள்? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள். கிரிகரியின் தாய் லிசா வெய்ன் தனது முகநூல் பக்கத்தில், “எனது மகன் நன்றாக சமைப்பான். புதிய ஓட்டல் தொடங்கவும் ஆசைப்பட்டான். நடாலி அவனுக்கு உதவியாக இருந்தாள். அவன் மரணத்தால் துடிக்கிறேன். கடைசியாக அன்னையர் தினத்தில் பார்த்தேன். என் கன்னத்தில் முத்தமிட்டான். அவன் இழப்பால் எனது இதயம் நொறுங்கி விட்டது” என்று கூறியுள்ளார்.

Next Story