சினிமா செய்திகள்

நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்கக் கூடாது? - தமன்னா கேள்வி + "||" + Why should actresses not earn higher salaries? - Tamanna Question

நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்கக் கூடாது? - தமன்னா கேள்வி

நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்கக் கூடாது? - தமன்னா கேள்வி
நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்கக் கூடாது என நடிகை தமன்னா கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார், தமன்னா. இவரை தெலுங்கில் ரவிதேஜா படத்தில் நடிக்க அணுகினர். ஆனால் அந்த படத்தில் நடிக்க அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும். அந்த தொகைக்கு பட நிறுவனம் உடன்படாததால் படத்தில் நடிக்க மறுத்து விட்டதாகவும் தகவல்கள் பரவின. இதற்கு விளக்கம் அளித்து தமன்னா கூறியதாவது:-

என்னை பற்றி கற்பனையான தகவல்கள் பரவி உள்ளன. படத்தில் நடிப்பது குறித்து எனது மேலாளரிடம் படக்குழுவினர் பேசினர். ஆனால் கொரோனா பிரச்சினையால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. இப்போது எந்த பட நிறுவனமும் படப்பிடிப்புக்கு தயாராகவில்லை.

ரவிதேஜாவுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. எனவே அவரது படத்தை ஒதுக்க வேண்டிய தேவை இல்லை. சம்பளம் என்பது நடிகர்களின் தனிப்பட்ட விஷயம். குறிப்பிட்ட சம்பளத்தை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. நடிகைகள் சம்பளத்தை குறைத்துவிட்டு கொடுக்க வேண்டும் என்று பேசுவது ஏற்புடையது அல்ல. ஒருதலைபட்சமானது. இதே கேள்வியை நடிகரிடம் கேட்பது இல்லை. நடிகைகள் குறிப்பிட்ட நிலையை அடைய கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார்கள். கதாநாயகனை போலவே கதாநாயகியும் படத்துக்கு தேவை. நடிகைகள் அதிக சம்பளம் ஏன் வாங்க கூடாது? ஆண்கள் மட்டும்தான் அதிக சம்பளம் வாங்க வேண்டுமா?

இவ்வாறு தமன்னா கேள்வி எழுப்பி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை வாக்குமூலம் : பிரபல நடிகைகள் சாரா அலி கான், ராகுல் ப்ரீத் சிங் போதைப்பொருள் தடுப்பு போலீசார் கண்காணிப்பில்
நடிகை ரியா சக்ரபோர்த்தி வெளியிட்ட பட்டியல்: பிரபல நடிகைகள் சாரா அலி கான், ராகுல் ப்ரீத் சிங் போதைப்பொருள் தடுப்பு போலீசார் கண்காணிப்பில் உள்ளனர்.
2. சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக புகார்: கைதான நடிகைகளுக்கு நெருக்கடி முற்றுகிறது அமலாக்கத்துறையினர் விசாரிக்க முடிவு
போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அவர்களிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் நெருக்கடி முற்றியுள்ளதால் அந்த நடிகைகள் கலக்கத்தில் உள்ளனர்.
3. நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பது இல்லை - பிரகாஷ் ராஜ்
நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பது இல்லை என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
4. நடிகைகளிடம் குறுக்கு விசாரணை -மீண்டும் தீவிரமாகும் திலீப் வழக்கு
கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கி உள்ளது.