சினிமா செய்திகள்

எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பட அதிபர் போனிகபூர் விளக்கம் + "||" + I don't have a corona effect: Film Producer Bonikapur

எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பட அதிபர் போனிகபூர் விளக்கம்

எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை: பட அதிபர் போனிகபூர் விளக்கம்
தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று பட அதிபர் போனிகபூர் விளக்கம் அளித்துள்ளார்.
மும்பை, 

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர். இவர் இந்தி திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கிறார். தமிழில் அஜித்குமார் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்துள்ளார். மீண்டும் அவர் நடிக்கும் ‘வலிமை’ படத்தையும் தயாரித்து வருகிறார். போனிகபூருக்கு ஜான்வி, குஷி என்று 2 மகள்கள் உள்ளனர். ஜான்வி சினிமாவில் நடித்து வருகிறார். போனிகபூர் மும்பை அந்தேரியில் உள்ள லோகந்த் வாலா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் போனிகபூர் வீட்டில் வேலை பார்த்த 23 வயது பணியாளர் ஒருவருக்கு காய்ச்சல், சளி ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானது. இதனால் இந்தி பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. போனிகபூருக்கும் நோய் தொற்று இருக்கலாம் என்று தகவல் பரவியது.

இதையடுத்து போனிகபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது வீட்டு பணியாளருக்கு கொரோனா உறுதியானது உண்மைதான். அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனக்கும், மகள்களுக்கும் கொரோனா அறிகுறி இல்லை. நலமாக இருக்கிறோம். ஆனாலும் எங்களை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்”.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.