சின்னத்திரை நடிகரிடம் பிரபுதேவா படத்தில் நடிக்க வைப்பதாக மோசடி


சின்னத்திரை நடிகரிடம் பிரபுதேவா படத்தில் நடிக்க வைப்பதாக மோசடி
x
தினத்தந்தி 21 May 2020 6:01 AM IST (Updated: 21 May 2020 6:01 AM IST)
t-max-icont-min-icon

சின்னத்திரை நடிகரிடம் பிரபுதேவா படத்தில் நடிக்க வைப்பதாக மோசடி நடந்துள்ளது.


பெரிய நடிகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களிடம் சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக ஏற்கனவே புகார்கள் வந்துள்ளன. தற்போது டி.வி நடிகர் ஒருவரிடமும் இதே பாணியில் மோசடி நடந்துள்ளது. அவரது பெயர் ஆன்ஸ் அரோரா. இவர் தன் ஹையான் உள்பட பல இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். மும்பையில் உள்ள லோகண்ட் வாலா பகுதியில் தங்கி, சினிமா வாய்ப்பு தேடி வந்தார். அவரை சுருதி என்ற பெண் அணுகி, பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் கதாநாயகனாக நடிக்கும் ஏக்தா டைகர் 3 படத்துக்கு நடிகர்-நடிகைகளை தேர்வு செய்யும் ஏஜெண்டாக பணியாற்றுவதாகவும், அந்த படத்தில் வில்லனாக நடிக்க உங்களுக்கு வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்றும் கூறியுள்ளார். பின்னர் பிரபுதேவாவை நீங்கள் சந்திக்க வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு ஆன்ஸ் அரோரா சந்தோஷப்பட்டுள்ளார். ஆனால் சல்மான்கான் தரப்பில் ஏக்தா டைகர் 3 படத்துக்கு நடிகர்-நடிகை தேர்வு நடத்தவில்லை என்றும், இதற்காக ஏஜெண்டை நியமிக்கவில்லை என்றும் அறிக்கை வெளியானது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆன்ஸ் அரோரா மும்பை ஓஷிவாரா போலீசில் புகார் அளித்துள்ளார்.

Next Story