சினிமா செய்திகள்

தேவர் மகன் 2-ம் பாகம்: கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி? + "||" + Thevar magan Part 2: Vijay Sethupathi as Kamal's villain?

தேவர் மகன் 2-ம் பாகம்: கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி?

தேவர் மகன் 2-ம் பாகம்: கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி?
தேவர் மகன் 2-ம் பாகத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி, இமேஜ் பார்க்காமல் மற்ற நடிகர்கள் படங்களிலும் நடித்து வருகிறார். ரஜினியின் பேட்ட, மாதவனுடன் விக்ரம் வேதா படங்களில் வில்லனாக வந்தார். ஓ மை கடவுளே படத்தில் சிறிய வேடத்திலும், சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாகவும் நடித்தார். சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு படத்திலும் சிறிய வேடம் ஏற்றார்.

கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. கடந்த வருடம் கமல்ஹாசனுக்கு நடந்த பாராட்டு விழா நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பேசும்போது, ‘கமலுடன் சேர்ந்து இந்தியன் 2 படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை தவற விட்டு விட்டேன். இப்போது அவரிடம் கேட்கிறேன். உங்களுடன் பணியாற்ற வாய்ப்பு தாருங்கள்’ என்று கூறினார். இதையடுத்து அவரை தலைவன் இருக்கின்றான் படத்துக்கு ஒப்பந்தம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராவதாக கூறப்படுகிறது. இதில் விஜய் சேதுபதி என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அவர் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேவர் மகன் படத்தில் நாசர் வில்லனாக நடித்து இருந்தார். கிளைமாக்சில் அவரை கமல்ஹாசன் கொன்று விடுவதுபோல் காட்சி வைத்து இருந்தனர். இதன் இரண்டாம் பாகமாக தயாராகும் தலைவன் இருக்கின்றான் படத்தில் நாசரின் மகனாக விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது.