சினிமா செய்திகள்

பாகுபலி பட வில்லன் நடிகர் ராணாவுக்கு நிச்சயதார்த்தம் + "||" + Rana Daggubati and Miheeka Bajaj get officially engaged

பாகுபலி பட வில்லன் நடிகர் ராணாவுக்கு நிச்சயதார்த்தம்

பாகுபலி பட வில்லன் நடிகர் ராணாவுக்கு நிச்சயதார்த்தம்
பாகுபலி பட வில்லன் நடிகர் ராணாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் ராணா. பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து உலகம் முழுவதும் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் காடன் படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மிஹீகா பஜாஜ் என்ற பெண்ணை காதலிப்பதாக ராணா அறிவித்தார். அந்த பெண்ணின் புகைப்படத்தையும் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டார். மிஹீகா பஜாஜ் ஐதராபாத்தை சேர்ந்தவர். ஆடை, பர்ஸ், கைப்பை வடிவமைப்பு நிறுவனம் நடத்துகிறார். மாடலிங் தொழிலும் செய்கிறார்.

இந்த நிலையில் ராணா-மிஹீகா பஜாஜ் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. நெருங்கிய உறவினர்கள் இதில் கலந்து கொண்டனர். நிச்சயதார்த்த புகைப்படத்தை டுவிட்டரில் ராணா வெளியிட்டார். இந்த வருடம் இறுதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். ராணாவுக்கு நடிகர்-நடிகைகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவை விடுதலை செய்ய அமெரிக்க அரசு எதிர்ப்பு
மும்பை தாக்குதல் தலைமறைவு குற்றவாளியான ராணாவை விடுதலை செய்ய அமெரிக்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.