ஜோர்டானில் இருந்து கேரளா திரும்பிய நடிகர் பிருத்விராஜ் மற்றும் படக்குழு
ஜோர்டானில் சிக்கியிருந்த நடிகர் பிருத்விராஜ் மற்றும் அவரது படக்குழுவினர், கொச்சிக்கு விமானம் மூலம் வந்தடைந்தனர்.
கொச்சி,
தமிழில் மொழி, கனா கண்டேன், சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மலையாள நடிகரான பிரித்விராஜ், ஆடு ஜீவிதம் படப்பிடிப்புக்காக 58 பேருடன் கொரோனா பரவலுக்கு முன்பே ஜோர்டான் சென்று, பின்னர் ஊரடங்கு காரணமாக நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.
அங்குள்ள பாலைவனத்தில் முக்கிய காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தபோது விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் படக்குழுவினர் பாலைவன கூடாரங்களிலேயே முடங்கினர்.
தற்போது 4-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாய்நாடு அழைத்து வரப்பட்டுக் கொண்டுருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் பிருத்விராஜ் மற்றும் அவரது படக்குழுவைச் சேர்ந்த 58 பேர் கொச்சிக்கு விமானம் மூலம் வந்தடைந்தனர். நாடு திரும்பி உள்ள அவர்கள் 14 நாட்கள் தன்மைப்படுத்திக் கொள்ளவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
ஜோர்டான் நாட்டில் சிக்கித் தவித்த நடிகர் பிருத்விராஜ் மற்றும் படக்குழு சுமார் 70 நாட்கள் கழித்து நாடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story