சினிமா செய்திகள்

விண்ணைத்தாண்டி வருவாயா 2-ம் பாகம் மீண்டும் சிம்பு, திரிஷா ஜோடி + "||" + vinnaithandi varuvaya Part-2

விண்ணைத்தாண்டி வருவாயா 2-ம் பாகம் மீண்டும் சிம்பு, திரிஷா ஜோடி

விண்ணைத்தாண்டி வருவாயா 2-ம் பாகம்  மீண்டும் சிம்பு, திரிஷா ஜோடி
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை டைரக்டர் கவுதம் மேனன் படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா ஜோடியாக நடித்து 2010-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் விண்ணைத்தாண்டி வருவாயா. ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் வரவேற்பை பெற்றன. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று சிம்பு ரசிகர்கள் ஆர்வப்பட்டனர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2-ம் பாகத்துக்கான கதையின் ஒரு பகுதியை ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற பெயரில் குறும்படமாக எடுத்து கவுதம் மேனன் வெளியிட்டு உள்ளார். 12 நிமிடங்கள் உள்ள இந்த குறும்படத்தில் கார்த்திக், ஜெஸ்ஸியாக நடித்த சிம்பு, திரிஷாவின் வசனம் மட்டுமே இடம்பெற்று உள்ளது. மேலும் சிம்பு, ‘இப்போதும் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொல்ல, அதற்கு திரிஷா, ‘எனக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர்’ என்கிறார். குறும்படம் முழுவதும் கவுதமேனன் பாணி வசனங்கள் உள்ளன. இதற்கு ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசை அமைத்துள்ளார். இந்த குறும்படம் மூலம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை திரைப்படமாக்க இருப்பதை கவுதம் மேனன் உறுதிப்படுத்தி உள்ளார்.

சிம்பு தற்போது ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு முடிந்ததும் விண்ணைத்தாண்டி வருவாயா 2-ம் பாகம் பட வேலைகள் தொடங்கும் என்று தெரிகிறது.