நிவேதா பெத்துராஜின் உடம்பை குறைக்க சொன்ன கதாநாயகன்!
நிவேதா பெத்துராஜின் உடம்பை கதாநாயகன் ஒருவர் குறைக்க சொல்லி உள்ளார்.
நெல்சன் வெங்கடேசன் டைரக்டு செய்த ‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர், நிவேதா பெத்துராஜ். அவருக்கு ஜோடியாக ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்து இருந்தார். இவரை எல்லா இளம் கதாநாயகர்களுக்கும் பிடித்து இருக்கிறதாம். அதேபோல் இவருக்கு ரசிகர்கள் கூட்டமும் பெருகி வருகிறது.
இதற்கு காரணம் இருக்கிறது. நிவேதா பெத்துராஜ் அடிக்கடி தன்னை கவர்ச்சியாக படம் எடுத்து, அதை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். ஒருமுறை பதிவிட்ட படங்களை விட, அடுத்தமுறை பதிவிடும் படங்கள், படுகவர்ச்சியாக இருக்கிறதாம். எனவே அவருடைய கவர்ச்சி படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
அதுவே அவரை நட்சத்திர கதாநாயகர்களுக்கு ஜோடியாக்கி வருகிறது. ‘டிக் டிக் டிக்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த இவர், ‘திமிரு பிடிச்சவன்’ படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியானார். ‘சங்க தமிழன்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்தார். அடுத்து, ஜெகஜால கில்லாடி, பொன்.மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சில தெலுங்கு படங்களிலும் அவர் நடிக்கிறார். அங்கே யாரோ ஒரு கதாநாயகன் சொன்னபடி, உடல் எடையை குறைக்கும் முயற்சியில், நிவேதா பெத்துராஜ் ஈடுபட்டு இருக்கிறார்.
Related Tags :
Next Story