வாழ்க்கை, பந்தயம் இல்லை - நடிகை அமலாபால்


வாழ்க்கை, பந்தயம் இல்லை - நடிகை அமலாபால்
x
தினத்தந்தி 25 May 2020 6:28 AM IST (Updated: 25 May 2020 6:28 AM IST)
t-max-icont-min-icon

வாழ்க்கை, பந்தயம் இல்லை என்று நடிகை அமலாபால் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


கொரோனா ஊரடங்கினால் நடிகர், நடிகைகள் வீட்டில் முடங்கி உள்ளனர். ஓய்வு நேரத்தை செல்லப்பிராணிகளை கொஞ்சுதல், உடற்பயிற்சி, சமையல் செய்தல், புத்தகம் படித்தல், நடனம் கற்றல், ஓவியம் வரைதல் என்று கழிக்கின்றனர். கொரோனாவில் இருந்து தப்பிக்க சமூக விலகலை கடைபிடிக்கும்படி பேசி வீடியோவும் வெளியிடுகின்றனர்.

இந்த நிலையில் அமலாபால் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

“கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இந்த ஊரடங்கில் புதிதாக எதையும் கற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அதற்காக வருத்தப்பட வேண்டாம்.

வாழ்க்கை என்றாலே போட்டி பந்தயம் என்று நினைக்கும் மனோபாவத்தில் இருந்து மாற வேண்டும். பிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள். இந்த ஊரடங்கு காலத்தில் புதிதாக எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றோ, புத்தகங்கள் படிக்கவில்லை என்றோ வருத்தப்பட வேண்டாம். இது கற்றுக்கொள்வதற்கான நேரமோ அல்லது உற்பத்தியை பெருக்குவதற்கான நேரமோ இல்லை. அமைதியாக இருங்கள். ஒருவர் செய்வதை நாமும் செய்ய வேண்டும் என்று அவர் பின்னால் ஓட வேண்டிய தேவை இல்லை.”

இவ்வாறு அமலாபால் கூறியுள்ளார்.

Next Story