ஜூனியர் என்.டி.ஆரை அவமதித்ததாக நடிகை நிலாவுக்கு மிரட்டல்; போலீசில் புகார்


ஜூனியர் என்.டி.ஆரை அவமதித்ததாக நடிகை நிலாவுக்கு மிரட்டல்; போலீசில் புகார்
x
தினத்தந்தி 4 Jun 2020 7:19 AM IST (Updated: 4 Jun 2020 7:19 AM IST)
t-max-icont-min-icon

ஜூனியர் என்.டி.ஆரை அவமதித்ததாக நடிகை நிலாவுக்கு மிரட்டல், அதிர்ச்சியான நிலா ஐதராபாத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தமிழில் அன்பே ஆருயிரே. இசை, லீ, மருதமலை, காளை ஆகிய படங்களில் நிலா என்ற பெயரில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை மீரா சோப்ரா சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் தெலுங்கில் உங்களுக்கு பிடித்த நடிகர் மகேஷ்பாபுவா? ஜூனியர் என்.டி.ஆரா? என்று எழுப்பிய கேள்விக்கு மகேஷ்பாபு என்று பதில் அளித்தார். நான் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகை இல்லை. அவரை பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார். இது ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களை கோபப்படுத்தியது. அவர்கள் நிலாவை சகட்டு மேனிக்கு வலைத்தளத்தில் ஆபாசமாக திட்டினர். சிலர் கொலை மிரட்டல் விடுத்தனர். பாலியல் ரீதியாகவும் மிரட்டினர். இதனால் அதிர்ச்சியான நிலா ஐதராபாத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். டுவிட்டர் பக்கதில் ஜூனியர் என்.டி.ஆரை குறிப்பிட்டு அவர் கூறியிருப்பதாவது:

“ஜூனியர் என்.டி.ஆரை விட மகேஷ்பாபுவை பிடிக்கும் என்றதால் என்னை பாலியல் தொழிலாளி என்றும் ஆபாச படத்தில் நடிப்பவள் என்றும் அழைக்கின்றனர். கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதுபோன்ற ரசிகர்கள் கூட்டத்தை வைத்துக்க்கொண்டு உங்களால் வெற்றிபெற முடியும் என்று நினைக்கிறீர்களா? ஒருவருடைய ரசிகையாக இருப்பது குற்றமா? அனைத்து பெண்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது நீங்கள் ஜனியர் என்.டி.ஆர் ரசிகையாக இல்லாவிட்டால் பாலியல் தொல்லைக்கு ஆளாகலாம். கொலை செய்யப்படலாம். கூட்டு பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாகலாம்.” இவ்வாறு கூறியுள்ளார்.

Next Story