இந்தியில் பார்த்திபனின் ‘ஹவுஸ்புல்’ ரீமேக்
பார்த்திபனின் ‘ஹவுஸ்புல் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
புதிய பாதை படம் மூலம் இயக்குனரான பார்த்திபன் தொடர்ந்து பல படங்களை இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கடந்த வருடம் அவர் மட்டுமே நடித்து இயக்கிய ஒத்த செருப்பு படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. பட விழாக்களில் திரையிட்டும் பாராட்டுகள் பெற்றது.
தற்போது ஜோதிகாவுடன் நடித்த பொன்மகள் வந்தாள் படம் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தனது ஹவுஸ்புல் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பார்த்திபன் தயாராகி வருகிறார். இந்த படம் 1999-ல் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. பார்த்திபனே இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
விக்ரம், ரோஜா, சுவலட்சுமி, ஐஸ்வர்யா, சுவாதி, வடிவேலு ஆகியோரும் நடித்து இருந்தனர். இளையராஜா இசையமைத்து இருந்தார். தற்போது ஹவுஸ்புல் படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்க பார்த்திபன் திட்டமிட்டு உள்ளார். இதில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க முடிவு செய்து இருக்கிறார். இதற்காக படத்தின் டிவிடியை ஒரு தயாரிப்பாளர் மூலம் அமிதாப்பச்சனுக்கு அனுப்பி வைத்து இருப்பதாகவும் அவர் சம்மதத்துக்காக காத்து இருப்பதாகவும் பார்த்திபன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story