சினிமா செய்திகள்

ஜோதிடர் சொன்னதை கேட்டு நடிகை ‘நீலிமாராணி’ பெயரை மாற்றினார் + "||" + Actress Neelimarani changed her name after listening to the astrologer

ஜோதிடர் சொன்னதை கேட்டு நடிகை ‘நீலிமாராணி’ பெயரை மாற்றினார்

ஜோதிடர் சொன்னதை கேட்டு நடிகை ‘நீலிமாராணி’ பெயரை மாற்றினார்
ஜோதிடர் சொன்னதை கேட்டு நடிகை ‘நீலிமாராணி’ தனது பெயரை மாற்றிக் கொண்டார்.

தமிழ் பட கதாநாயகிகள், கதாநாயகர்களுடன் மரத்துக்கு மரம் ஓடிப்பிடித்து ‘டூயட்‘ பாடுவதை தவிர்த்து வருகிறார்கள். கதாநாயகர்களுக்கு சமமான பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து சாதனை பெண்மணிகளின் வாழ்க்கை வரலாற்று படங்கள், வெளிவர தொடங்கி உள்ளன.

நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா போன்ற முன்னணி நடிகைகள், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்கள். இந்த பட்டியலில் நடிகை நீலிமாராணியும் சேர்ந்து இருக்கிறார். ‘சின்னத்திரை’ மற்றும் இரண்டாவது கதாநாயகியாக பல படங்களில் நடித்து வந்த இவர், ‘கருப்பங்காட்டு வலசு’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

அதற்கு முன்னதாக ஜோதிடர் ஒருவரின் அறிவுரையை ஏற்று தனது பெயரை, ‘நீலிமா இசை’ என்று மாற்றியிருக்கிறார். ‘கருப்பங்காட்டு வலசு’ படத்தை பற்றியும், அதில் தனது கதாபாத்திரம் பற்றியும் அவர் கூறியதாவது:-

“இது, குற்றப்பின்னணி உள்ள திகிலான கதையம்சம் கொண்ட படம். பழைய பழக்க வழக்கங்களையும், மூட நம்பிக்கைகளையும் கொண்ட ஒரு கிராமத்தை ‘மாடர்ன்’ ஆக மாற்ற முயற்சிக்கிறாள், ஒரு பெண். அப்போது அந்த ஊரில், ஒரு குற்றம் நடக்கிறது. அதன் விளைவுகள்தான் திரைக்கதை.

எபிநேசர் தேவராஜ் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதுடன், நிர்வாக தயாரிப்பாளராகவும் இருக்கிறார். செல்வேந்திரன் டைரக்டு செய்கிறார்.