‘மிளிர்’ படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் ஐஸ்வர்யா தத்தா
நடிகை ஐஸ்வர்யா தத்தா, ‘மிளிர்’ படத்தில் தனது வித்தியாசமான தோற்றத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும்புலி, ஆறாது சினம், சத்ரியன், உள்ளிட்ட படங்களில் நடித்த ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். அவருக்கு படங்களும் குவிந்தன. அலேகா, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர், கன்னித்தீவு ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார். மிளிர் படத்தில் நடிக்கும் தனது தோற்றத்தை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் ஐஸ்வர்யா தத்தா தலை, கை மற்றும் முகத்தில் அடிபட்டு கட்டு போடப்பட்டு உள்ளது. ஒரு கம்பை கடித்தபடி ஆக்ரோஷமாக இருக்கிறார். இந்த தோற்றம் வலைத்தளத்தில் வைரலாகிறது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா தத்தாவா இது? நம்ப முடியவில்லை என்று வியந்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் கதையம்சத்தில் பல படங்கள் வந்துள்ளன. அந்த வரிசையில் இந்த படமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கதாநாயகனாக ஷரன் நடித்துள்ளார்.
கதை, திரைக்கதை எழுதி நாகேந்திரன் டைரக்டு செய்துள்ளார். சூர்யா தேவி தயாரித்துள்ளார். இந்த படம் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் திரைக்கு வருகிறது.
Related Tags :
Next Story