இணைய தளத்தில் விஜய் சேதுபதி படம்?
இணைய தளத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் படம் வெளியாகிறதா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா ஊரடங்கினால் 2 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. தியேட்டர்களை திறந்த பிறகும் அதிக ரசிகர்கள் படம் பார்க்க வருவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் புதிய படங்களை இணைய தளத்தில் வெளியிடுகிறார்கள். ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் வருகிற 19-ந்தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். அமிதாப்பச்சன் நடித்துள்ள குலாபோ சிடோபோ, வித்யாபாலனின் சகுந்தலா தேவி இந்தி படங்கள் மற்றும் கன்னடத்தில் உருவான பிரெஞ்சு பிரியாணி, மலையாளத்தில் தயாரான சூவியும் சுஜாதாவும் ஆகிய படங்கள் இணைய தளத்தில் வெளியாக உள்ளன.
தமிழில் தயாராகி உள்ள கலையரசனின் ‘டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்‘, அந்தகாரம் ஆகிய படங்களும் இணைய தளத்தில் வெளியாகலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ரண சிங்கம் படத்தையும் இணைய தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. இரண்டு ஓடிடி தளங்கள் படக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றன.
Related Tags :
Next Story