கொரோனா பற்றிய படம்!


கொரோனா பற்றிய படம்!
x
தினத்தந்தி 14 Jun 2020 5:08 AM IST (Updated: 14 Jun 2020 5:08 AM IST)
t-max-icont-min-icon

உலகையே பயமுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றிய படம், ‘கொரோனா’ என்ற பெயரிலேயே படமாகி வருகிறது.

கே.அய்யாவு, ‘தாமரை செல்வன்’ என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி டைரக்டு செய்கிறார். எம்.ரஜினிகாந்த், ஜி.அண்ணாமலை ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

புதுமுகங்கள் ராகவேந்திரா, அழகேஷ், தீபிகா ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ‘காதல்’ சுகுமார், தேவதர்சினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். புதுமுகம் விஜய் விநாயக் வில்லனாக அறிமுகம் ஆகிறார்.

Next Story