சினிமா செய்திகள்

அண்ணன் சூரியும், தங்கை கீர்த்தி சுரேசும்..! + "||" + Brother charecter in actor Soori Keerthi Surash is the sister

அண்ணன் சூரியும், தங்கை கீர்த்தி சுரேசும்..!

அண்ணன் சூரியும், தங்கை கீர்த்தி சுரேசும்..!
ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை அடுத்து கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பென்குயின்’ படமும் இணையதளத்தில் வெளியாக இருக்கிறது.
‘பென்குயின்’ இது, ஒரு குற்றப்பின்னணியிலான திகில் படம். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.

முன்னதாக, ‘பென்குயின்’ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. டிரைலரை பார்த்துவிட்டு நடிகர் சூரி, கீர்த்தி சுரேசை பாராட்டியிருக்கிறார். ‘’டிரைலர் சிறப்பு...அதை விட, தங்கச்சியின் நடிப்பு சிறப்பு... அடுத்த விருதுக்கு தயாராக இருங்க” என்று அண்ணன் சூரி, தங்கை கீர்த்தி சுரேசை வாழ்த்தினார்.


பதிலுக்கு, ‘’ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா” என்று கீர்த்தி சுரேஷ் நன்றி தெரிவித்து இருக்கிறார்.

(இவர், ‘நடிகையர் திலகம்‘ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர்.)