“சினிமாவின் பல படிகளை கடந்தவர், கமல்ஹாசன்!” -ஏ.ஆர்.ரகுமான்


“சினிமாவின் பல படிகளை கடந்தவர், கமல்ஹாசன்!” -ஏ.ஆர்.ரகுமான்
x
தினத்தந்தி 14 Jun 2020 6:02 AM IST (Updated: 14 Jun 2020 6:02 AM IST)
t-max-icont-min-icon

கமல்ஹாசனும், ஏ.ஆர்.ரகுமானும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். அப்போது இருவரும் பேசிய கலந்துரையாடல் கூறியதாவது.

‘’ஒரு டைரக்டருக்கு மிக லகுவான சூழலை அமைத்துக் கொடுப்பவர், ரகுமான். அவருடன் பணிபுரிவது மகிழ்வான அனுபவம். இசையில் பல புதிய முயற்சிகளை வெற்றிகரமாக கையாண்டவர். அவர் ஒரு இசையமைப்பாளராக மட்டும் நின்று விடாமல், எழுத்தாளராகவும் டைரக்டராகவும் பரிமளிக்க வேண்டும்‘’ என்று கமல்ஹாசன் கூறினார். ‘’நான் இன்று வரை கமல்ஹாசனின் ரசிகர். ஒரு சினிமா ரசிகனின் ரசனையை செதுக்கி செப்பனிடும் சிற்பி, கமல்ஹாசன். சினிமாவின் பல படிகளை முழுமையாக கடந்த உண்மையான கலைஞன். அவரும், டைரக்டர் கே.விஸ்வநாத்தும் இணைந்து பணிபுரிந்த பாரம்பரிய இசையை கருவாக கொண்ட படங்களில் நான் இசையமைக்காதது, நிறைவேறாத ஆசை” என்று ஏ.ஆர்.ரகுமான் தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

Next Story