சினிமா செய்திகள்

42 குழந்தைகளுக்கு லாரன்ஸ் உதவி + "||" + 42 for children actor Lawrence Help

42 குழந்தைகளுக்கு லாரன்ஸ் உதவி

42 குழந்தைகளுக்கு லாரன்ஸ் உதவி
சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 42 குழந்தைகளுக்கு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில், “எனது அறக்கட்டளை இல்ல குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு குணமாகி திரும்பி உள்ளனர்.


இதுபோல் ராயபுரம் அரசு காப்பகத்தில் உள்ள 42 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அந்த காப்பகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் எனது குழந்தைகள் போல் பாவித்து விரைவாக குணமடைய பிரார்த்திக்கிறேன்.

மேலும் கொரோனாவால் பாதித்த அந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு தேவைபப்படுவதால் என்னால் முடிந்த உதவியை மாவட்ட குழந்தைகள் காப்பக அதிகாரி மூலம் செய்து வருகிறேன்” என்று கூறியுள்ளார். ராகவா லாரன்ஸ் தான் நடிக்க உள்ள அடுத்த படத்தின் சம்பளத்தில் இருந்து ரூ.25 லட்சத்தை 3 ஆயிரத்து 385 துப்புரவு தொழிலாளர்கள் வங்கி கணக்கில் தயாரிப்பாளர் மூலம் செலுத்தி உள்ளார். இதற்காக அவருக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.