பட அதிபர் சங்கத்துக்கு ஆகஸ்டு மாதம் தேர்தல்?


பட அதிபர் சங்கத்துக்கு ஆகஸ்டு மாதம் தேர்தல்?
x
தினத்தந்தி 16 Jun 2020 1:08 AM GMT (Updated: 16 Jun 2020 1:08 AM GMT)

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பொறுப்பில் இருந்த விஷாலுக்கு எதிராக அதிருப்தி கோஷ்டியினர் போராட்டங்கள் நடத்தி சங்க அலுவகத்துக்கு பூட்டு போட்டதால் அரசு தனி அதிகாரியை நியமித்தது.

கோர்ட்டு உத்தரவின் பேரில் சங்கத்துக்கு கடந்த மே 10-ந்தேதி தேர்தல் நடப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கினால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. செப்டம்பர் 30-ந் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இதையடுத்து மீண்டும் தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. ஆகஸ்டு மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார். பட அதிபர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக டி.சிவா, தேனாண்டாள் முரளி ஆகியோர் ஏற்கனவே அறிவித்து உள்ளனர். பாரதிராஜா, விஷால், எஸ்.தாணு, டி.ஜி.தியாகராஜன் ஆகியோரும் தலைவர் பதவிக்கு போட்டியிட ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். விஷால் போட்டியிடுவதா வேண்டாமா என்று ஆலோசித்து வருகிறார். தனது அணி சார்பில் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிடுவோர் பட்டியலை முரளி ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். தற்போது செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்கு தணிகைவேல், மதியழகன், பழனிவேல், டேவிட் ராஜ், விஜயமுரளி ஆகியோரும் போட்டியிட உள்ளதாக அறிவித்து உள்ளார்.

Next Story