பிரபல இயக்குனர் கவலைக்கிடம்
பிரபல மலையாள இயக்குனர் கவலைக்கிடமாக உள்ளார்.
பிரபல மலையாள இயக்குனர் சச்சி. இவர் கொரோனா ஊரங்குக்கு முன் பிரிதிவிராஜ், பிஜூமேனன் ஆகியோர் இணைந்து நடித்த ‘அய்யப்பனும் கோஷியும்‘ படத்தை டைரக்டு செய்து வெளியிட்டார். ரூ.6 கோடி செலவில் எடுத்த இந்த படம் ரூ.60 கோடிக்கு மேல் வசூலித்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றது. அய்யப்பனும் கோஷியும் படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. தெலுங்கிலும் ரீமேக் ஆக உள்ளது. ஏற்கனவே பிரிதிவிராஜ் பிஜூமேனன் நடித்த அனார்கலி படத்தையும் சச்சி இயக்கி உள்ளார்.
மலையாளத்தில் சாக்லேட், ராபின் ஹூட், மேக்கப் மேன், சீனியர்ஸ், ராமலீலா ரன்பேபி ரன் உள்பட பல வெற்றி படங்களுக்கு திரைக்கதையும் எழுதி உள்ளார். சில தினங்களுக்கு முன்பு சச்சிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளிக்கின்றனர். நரம்பு செயல்பாடு குறைந்துள்ளதால் மூளைக்கு செல்லும் பிராண வாயுவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story