சினிமா செய்திகள்

கொரோனா பயம் வந்தால்“வடிவேல் காமெடி பாருங்கள்!”எஸ்.வி.சேகர் சொல்கிறார் + "||" + “See vadivelu comedy if corona virus fear arrives ” Says SV Sekhar

கொரோனா பயம் வந்தால்“வடிவேல் காமெடி பாருங்கள்!”எஸ்.வி.சேகர் சொல்கிறார்

கொரோனா பயம் வந்தால்“வடிவேல் காமெடி பாருங்கள்!”எஸ்.வி.சேகர் சொல்கிறார்
கொரோனா பரவுவதை தடுப்பது எப்படி? என்று பல நடிகர், நடிகைகள் தங்கள் கருத்துகளை சொல்லி வருகிறார்கள். நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர், கொரோனா பரவுவதை தடுப்பது எப்படி? என்ற தனது கருத்தை சொன்னார்.

கொரோனா பரவுவதை தடுப்பது எப்படி? என்று பல நடிகர், நடிகைகள் தங்கள் கருத்துகளை சொல்லி வருகிறார்கள். நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர், கொரோனா பரவுவதை தடுப்பது எப்படி? என்ற தனது கருத்தை சொன்னார்.

‘’அரசாங்கம் போடுகிற சட்டத்தை பொதுமக்கள் மதிக்க வேண்டும். மதித்தால்தான் கொரோனா பரவாது. அரசாங்கம் நோய் பரவாமல் இருக்க வீட்டிலேயே இருங்கள் என்று சொல்கிறது. அதை மதித்து வீட்டிலேயே இருங்கள். நோய் பரவாது.

இன்னொரு விசயம். கொரோனா வந்துவிடுமோ? என்று பயப்படக்கூடாது. பாம்பு கடித்து செத்தவனை விட, பயத்தில் சாகிறவங்க நிறைய பேர் இருக்கிறார்கள் என்று சொல்வார்கள். கொரோனாவை நினைத்து யாரும் பயப்படக்கூடாது. அப்படி பயம் வந்தால், டி.வி.யில் வடிவேல் ‘காமெடி’ பாருங்கள்” என்றார், எஸ்.வி.சேகர்.