சினிமா செய்திகள்

கொரோனா குமார்’ படத்தில் கவுரவ வேடத்தில், விஜய் சேதுபதி! + "||" + Vijay Sethupathi host guest role in korona kumar movie

கொரோனா குமார்’ படத்தில் கவுரவ வேடத்தில், விஜய் சேதுபதி!

கொரோனா குமார்’ படத்தில் கவுரவ வேடத்தில், விஜய் சேதுபதி!
கொரோனா குமார் படத்தில் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளார்

விஜய் சேதுபதி நடித்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா,’ ‘ஜுங்கா’ ஆகிய படங்களையும், கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’ படத்தையும் டைரக்டு செய்தவர், கோகுல். இவர் அடுத்து டைரக்டு செய்யும் படத்துக்கு, ‘கொரோனா குமார்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதில், கவுரவ வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். கே.சதீஷ் தயாரிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

ஒரு பெண்ணின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ‘ஹெலன்’ என்ற மலையாள படத்தை வாங்கி தமிழில், ‘ரீமேக்‘ செய்து வருகிறார். இந்த படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. இது முடிவடைந்ததும், ‘கொரோனா குமார்’ படத்தை இயக்க முடிவு செய்து இருக்கிறார்.தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையை சேர்ந்தவர்
நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு சமூக வலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் இருப்பது கண்டுபிடிப்பு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2. சீனுராமசாமி இயக்கிய விஜய்சேதுபதியின் 2 படங்கள் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?
விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களையும் ஓ.டி.டி.யில் வெளியிட படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. விஜய் சேதுபதி பட நடிகை: நிஹரிகா திருமண நிச்சயதார்த்தம்
விஜய் சேதுபதி பட நடிகை நிஹரிகா திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.