கமல்ஹாசனின் அண்ணன் 90 வயது சாருஹாசன், மீண்டும் ‘தாதா’ வேடத்தில் மிரட்டுகிறார்


கமல்ஹாசனின் அண்ணன்  90 வயது சாருஹாசன், மீண்டும் ‘தாதா’ வேடத்தில் மிரட்டுகிறார்
x
தினத்தந்தி 3 July 2020 12:15 PM IST (Updated: 3 July 2020 12:15 PM IST)
t-max-icont-min-icon

கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் நடித்த தாதா 87 படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் தாதாவாக நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த படம், ‘தாதா 87.’ அவர் அந்த தாதா வேடத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி, ஆச்சரியப்படுத்தினார். படம் வெற்றிகரமாக ஓடியது. விஜய்ஸ்ரீ ஜி, டைரக்டு செய்திருந்தார். தற்போது இந்தப் படத்தின் இரண் டாம் பாகம் தயாராகி வருகிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

பலம் என்பது உடல் வலிமையை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை. அது, மூளையை வைத்து முடிவு செய்யப்படுவது. சத்ரியனாக இருப்பது மட்டும் முக்கியமல்ல. சாணக்கியனாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து, சாருஹாசனை மீண்டும் இயக்குகிறார், டைரக்டர் விஜய்ஸ்ரீ ஜி.

உள்ளூரில் சாமானியமானவராக இருக்கும் ஒரு தாதா, தனது மூளையை பயன்படுத்தி எப்படி உலக தாதாக்களை ஆள்கிறார் என்பதே கதை. 90 வயதான சாருஹாசன் மீண்டும் தாதாவாக நடிக்கிறார். நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜுமன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ஐஸ்வர்யா தத்தா, சாண்ட்ரியா, சாந்தினி, அனித்ரா நாயர், ஜூலி ஆகியோர் கதாநாயகி களாக நடித்து வருகிறார்கள். மைம்கோபி, ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Next Story