சினிமா செய்திகள்

“சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகவில்லை” ரகுல்பிரீத்சிங் மறுப்பு + "||" + Sivakarthigeyan not opt out of the Movie Rakul Preet Singh refuses

“சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகவில்லை” ரகுல்பிரீத்சிங் மறுப்பு

“சிவகார்த்திகேயன் படத்தில் இருந்து விலகவில்லை”  ரகுல்பிரீத்சிங் மறுப்பு
‘அயலான்’ படத்தில் இருந்து நான் விலகவில்லை என்று நடிகை ரகுல்பிரீத்சிங் தெரிவித்துள்ளார்.
‘புத்தகம்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமான ரகுல்பிரீத்சிங், அடுத்து ‘என்னமோ ஏதோ,’ ‘தடையற தாக்க,’ ‘தீரன் அதிகாரம் ஒன்று,’ ‘என் ஜி கே,’ ‘தேவ்’ ஆகிய படங்களில் நடித்தார். என்றாலும் தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகியாக முடியவில்லையே என்ற ஆதங்கம் தனக்கு இருப்பதாக அவர் பல பேட்டிகளில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அவருடைய ஆதங்கத்தை தீர்ப்பது போல் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படம் அமைந்தது. அதில் அவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில், ‘அயலான்’ படத்தில் இருந்து ரகுல்பிரீத்சிங் விலகி விட்டதாக ஒரு தகவல் பரவியது. அதைக் கேள்விப்பட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். “யாரோ எனக்கு எதிரியாக இருப்பவர் இப்படி ஒரு வதந்தியை பரப்பி விட்டு இருக்கிறார். அதை நம்ப வேண்டாம். ‘அயலான்’ படத்தில் நான் நடிக்கிறேன்” என்று அவர் கூறினார்.

“இந்த அறிவிப்பை கேள்விப்பட்டு என் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன்” என்றும் அவர் கூறியிருக்கிறார். ‘அயலான்’ படத்தை ஜே.ரவிகுமார் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.