டி.வி. நடிகைக்கு கொரோனா
டி.வி நடிகை அதிதி குப்தா சோப்ராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
கொரோனா பரவல் ஊரடங்கையும் மீறி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடிகர் நடிகைகளும் இந்த வைரஸ் தொற்றில் சிக்குகிறார்கள். பழம்பெரும் பாடகர் ஏ.எல்.ராகவன் மற்றும் கமலஹாசன் நடித்த ராஜ்திலக் இந்தி படத்தை தயாரித்த பிரபல இந்தி பட அதிபர் அனில்கபூர் ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். தமிழில் வாணிராணி, அரண்மனை கிளி, ரன் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள நவ்யா சாமி, இந்தி நடிகை இஷிகா போரா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள். இந்த நிலையில் இன்னொரு டி.வி நடிகைக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவரது பெயர் அதிதி குப்தா சோப்ரா, இவர் இந்தியில் இஷ்க்பாஸ், அனுபமா, காலா டீக்கா, புனர் விவா உள்பட பல டி.வி தொடர்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து இருக்கிறார். அவர் கூறும்போது, ‘’ எனக்கு வாசனையை நுகரும் உணர்வு இல்லாமல் போனதால் பரிசோதனை செய்தேன். அப்போது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுகிறேன். மன அழுத்தம் ஏற்பட்டது. தியானம் மற்றும் நேர்மறை சிந்தனைகள் மூலம் உடல் நலம் தேறி வருகிறேன்“ என்றார்.
Related Tags :
Next Story