சவால்களை விரும்பும் காஜல் அகர்வால்
சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பினேன் என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கில் நடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-
“வாழ்க்கையிலும் சரி சினிமாவிலும் சரி எனக்கு எதிரான ஒவ்வொரு பிரச்சினையையும் ஒரு சாவாலாக எடுத்துக்கொள்கிறேன். ஒரு வேலையை பார்த்து பயப்படுவதோ பிரச்சினையை பார்த்து ஓடிப்போவதோ கிடையாது. அப்படி செய்தால் அது நமது பலகீனமாக மாறி விடும். நான் நடித்த ஒவ்வொரு படத்திலும் எனக்கு சவாலாக இருக்கிற மாதிரியான நிறைய கதாபாத்திரங்கள் கிடைத்தன. அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்கத்தான் நானும் விரும்பினேன். படப்பிடிப்பில் தொழில் ரீதியாக பிரச்சினைகள் நிறையவே இருந்தன. இப்போது அவற்றை நினைத்து பார்த்தாலும் இனிமையான நினைவுகள்தான். விவேகம் படப்பிடிப்பில் மைனஸ் 12 டிகிரி குளிரில் மிகவும் கஷ்டமாக இருந்தாலும் புடவை கட்டி நடித்தேன். திரையில் ரசிகர்கள் பார்த்து பாராட்டியதை பார்த்தபோது பட்ட கஷ்டங்கள் எல்லாம் ஆனந்தமாக மாறி விட்டது. இதுமாதிரி சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கிறது. நம்மால் சாதிக்க முடியாது என்று நினைத்தால் அதுதான் நமது பலகீனம். சாதிக்க முடியும் என்று நினைத்தால் அதுதான் நமது பலம்.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
Related Tags :
Next Story