வாரிசு நடிகர்களால் பாதிக்கப்பட்ட நிலா


வாரிசு நடிகர்களால் பாதிக்கப்பட்ட நிலா
x
தினத்தந்தி 6 July 2020 12:03 PM IST (Updated: 6 July 2020 12:03 PM IST)
t-max-icont-min-icon

சினிமா துறை குறிப்பிட்டவர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று நடிகை நிலா கூறியுள்ளார்.

தமிழில் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை, இசை, கில்லாடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிலா இந்தியில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தினால் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக ஏற்கனவே அவர் குற்றம் சாட்டினார். தற்போது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியதாவது:- “நானும் வேறு சிலரும் நடிகர்கள் எதற்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்களை அந்த நிலைக்கு கொண்டு செல்வது எது என்ற விஷயங்களை வெளிப்படுத்த விரும்புகிறோம். சினிமா துறை குறிப்பிட்டவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. இயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கின்றனர். முதிர்ச்சியான இயக்குனர்கள் அவ்வாறு செய்வது இல்லை. எனக்கும் அதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இதை வெளிப்படுத்தினால் எத்தனை பேர் ஆதரவு கிடைக்கும் என்பது கேள்விக்குறி. சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு பிறகும் எதுவும் இங்கே மாறவில்லை. வேலையை தாண்டியும் பல விஷயங்கள் சினிமா துறையில் நடக்கின்றன. இந்த அழுத்தங்கள்தான் தவறான முடிவுகளை எடுக்க தூண்டுகிறது. சுயமரியாதை, கவுரவத்தை விட மன அமைதி முக்கியம்.”

இவ்வாறு நிலா கூறியுள்ளார்.

Next Story