தமிழர்களுக்கு நன்றிக்கடன்: 23 வருட சினிமா வாழ்க்கை பற்றி சிம்ரன் நெகிழ்ச்சி
நடிகை சிம்ரன் சினிமாவுக்கு வந்து 23 ஆண்டுகள் ஆகிறது.
1997-ல் வி.ஐ.பி, ஒன்ஸ்மோர் ஆகிய 2 படங்களில் நடிகை சிம்ரன் அறிமுகமானார். இந்த படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்தது. அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பிரியமானவளே, பம்மல் கே.சம்மந்தம், கன்னத்தில் முத்தமிட்டால், நியூ, வாரணம் ஆயிரம் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். 2003-ல் தீபக் பகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். திரையுலகில் 23 வருடங்களாக நீடிப்பது குறித்து சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது, “23 ஆண்டுகளுக்கு பிறகும் திரையுலக சகாப்தமான சிவாஜி கணேசனுடன் பணியாற்றிய நாட்களை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். அந்த நாளில் எனது வாழ்நாள் கனவு நிறைவேறியது. அவரிடம் இருந்து ஆசிர்வாதமும் படிப்பினையும் கிடைத்தது. அதுபோல் நண்பர்கள் விஜய், பிரபுதேவா, ரம்பா, அப்பாஸ் ஆகியோருடன் நடித்ததும் எனது அதிர்ஷ்டம். எனது கடைசி மூச்சு உள்ளவரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்” என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story