அதிரடி சண்டை காட்சிகளுடன் அறிவழகனின் போலீஸ் கதை


அதிரடி சண்டை காட்சிகளுடன் அறிவழகனின் போலீஸ் கதை
x
தினத்தந்தி 10 July 2020 12:11 PM IST (Updated: 10 July 2020 12:11 PM IST)
t-max-icont-min-icon

ஆறாது சினம், ஈரம், வல்லினம், குற்றம் 23 ஆகிய படங்களை இயக்கியவர், அறிவழகன். இவர் இப்போது அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

அருண் விஜய் ஜோடியாக ரெஜினா கசன்ட்ரா நடிக்கிறார். படத்தைப் பற்றி டைரக்டர் அறிவழகன் கூறும்போது, “இது ஒரு போலீஸ் கதை. ரகசிய போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரெஜினா கசன்ட்ரா நடிக்கிறார். இவரும் போலீஸ் அதிகாரியாகவே வருகிறார்.

இதுவரை நான் இயக்கிய படங்களில், அதிரடியான அதிக சண்டை காட்சிகளை கொண்ட படம், இதுதான். படத்துக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை. பொருத்தமான டைட்டிலை தேடி வருகிறோம்” என்றார்.

‘அறிவழகன் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும், தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மத்தியிலும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை இந்த படம் திருப்தி செய்யும்’ என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Next Story