ஒரு புதுமையான முயற்சி; சுதா கொங்கரா இயக்கத்தில், ஒரே படத்தில் பல கதைகள்


ஒரு புதுமையான முயற்சி; சுதா கொங்கரா இயக்கத்தில், ஒரே படத்தில் பல கதைகள்
x
தினத்தந்தி 10 July 2020 12:23 PM IST (Updated: 10 July 2020 12:23 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் பட உலகின் திறமையான டைரக்டர்களில், சுதா கொங்கராவும் ஒருவர். இவர் இயக்கிய ‘இறுதிச்சுற்று’ படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி பெற்று வசூலை அள்ளியது.

சுதா கொங்கரா இயக்கத்தில், ‘சூரரைப் போற்று’ படம் உருவாகி இருக்கிறது. இதில், கதாநாயகனாக சூர்யா நடித்து இருக்கிறார். இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக படம் திரைக்கு வருவது தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், விஜய் நடிக்கும் புதிய படத்தை சுதா கொங்கரா டைரக்டு செய்வார் என்று கூறப்பட்டது. சில காரணங்களால் அந்த திட்டம் தள்ளிப்போடப்பட்டுள்ளது. அதற்கு பதில், சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தை இணையதளத்துக்காக சுதா கொங்கரா இயக்குகிறார்.

இது ஆணவக் கொலையை கருவாகக் கொண்ட கதையம்சம் உள்ள படம். ஒரே படத்தில் பல கதைகளை கொண்ட (‘ஆந்தாலஜி’) திரைப்படம் இது. 

Next Story