‘துக்ளக் தர்பார்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அதிதிராவ்; தங்கை வேடத்தில், மஞ்சிமா மோகன்


‘துக்ளக் தர்பார்’ படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அதிதிராவ்; தங்கை வேடத்தில், மஞ்சிமா மோகன்
x
தினத்தந்தி 12 July 2020 6:50 AM GMT (Updated: 12 July 2020 6:50 AM GMT)

விஜய் சேதுபதி நடித்து அடுத்து திரைக்கு வரயிருக்கும் புதிய படம், ‘துக்ளக் தர்பார்.’ இது, அரசியல் கதையம்சம் கொண்ட படம். படத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி டைரக்டர் டெல்லி பிரசாத் தீனதயாளன் கூறியதாவது:-

“தமிழ் பட உலகில் எப்போதுமே அரசியல் சார்ந்த கதைகளுக்கு வரவேற்பு இருக்கும். அதற்கு உதாரணமாக ‘அமைதிப்படை’ உள்பட பல படங்களை கூறலாம். அந்த வரிசையில், ‘துக்ளக் தர்பார்’ படமும் இடம் பெறும்.

கதாநாயகன், கதையின் நாயகன், அப்பா வேடம், வில்லன் வேடம் என கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வரும் விஜய் சேதுபதி மாறுபட்ட ஒரு வேடத்தில், கதையின் நாயகனாக நடிக்கிறார். இதில் அவருக்கு அரசியல்வாதி வேடம்.

ஒரு முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார். விஜய் சேதுபதியும், பார்த்திபனும் ஏற்கனவே ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்கள்.

சில வருட இடைவெளிக்குப்பின் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ், தங்கை வேடத்தில் மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் பங்கு பெறுகிறார்கள்.

இவர்களுடன் கருணாகரன், பக்ஸ் பெருமாள் ஆகியோரும் நடிக்கிறார்கள். லலித்குமார் தயாரிக்கிறார். படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்தது.”

Next Story