சினிமா செய்திகள்

“மீ டூவில் சிக்கும் அப்பாவி நடிகைகள்” நடிகை அதிதிராவ் + "||" + "Innocent Actresses Trapped in Me Too" Actress Aditi rao

“மீ டூவில் சிக்கும் அப்பாவி நடிகைகள்” நடிகை அதிதிராவ்

“மீ டூவில் சிக்கும் அப்பாவி நடிகைகள்” நடிகை அதிதிராவ்
மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், உதய நிதியின் சைக்கோ படங்களில் நடித்துள்ள அதிதிராவ் திரையுலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தையும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதை மீ டூவில் நடிகைகள் வெளிப்படுத்துவது பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
“சினிமாவில் படுக்கைக்கு அழைப்பது பற்றி பலர் பேசுகிறார்கள். திரையுலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை உள்ளது. மிரட்டல்களையும் எதிர்கொள்கின்றனர். சிலர் இதில் இருந்து தப்பி விடுகின்றனர். அப்பாவி நடிகைகள் சிக்கி கொள்கிறார்கள். எனது அதிர்ஷ்டம் காரணமாக இதில் நான் சிக்காமல் தப்பி விட்டேன். வாரிசுகள் ஆதிக்கம் எல்லா துறையிலும் இருக்கிறது.


குடும்பத்தினர் குறிப்பிட்ட துறையில் இருந்தால் வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடும். மற்றவர்கள் கீழே விழுந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும் வாரிசுகளுக்கு குறைவாக இருக்கும். இதில் யாரையும் குறை சொல்வதற்கு இல்லை. ஒவ்வொருவரும் பெயர் மரியாதையை சம்பாதிக்க வேண்டியது முக்கியம்.

நானும் வாரிசு நடிகரும் நடித்துள்ள படங்களை பார்க்கிறவர்கள் என்னிடம் நீ சிறப்பாக நடித்துள்ளாய் என்று சொல்வதோடு விட்டு விடுவார்கள். ஆனால் வாரிசு நடிகரிடம் உங்கள் நடிப்பு உலகத்திலேயே சினிமா சரித்திரத்திலேயே சிறந்த நடிப்பாக இருந்தது என்று புகழ்ந்து தள்ளுவார்கள்.”

இவ்வாறு அதிதிராவ் கூறியுள்ளார்.