சினிமா செய்திகள்

வலைத்தளத்தில் “என் பெயரில் போலி பதிவு வெளியிட்டால் வழக்கு”- டைரக்டர் தங்கர் பச்சான் + "||" + Case of posting fake registration in my name on the website - Director Tanger Bachchan

வலைத்தளத்தில் “என் பெயரில் போலி பதிவு வெளியிட்டால் வழக்கு”- டைரக்டர் தங்கர் பச்சான்

வலைத்தளத்தில் “என் பெயரில் போலி பதிவு வெளியிட்டால் வழக்கு”- டைரக்டர் தங்கர் பச்சான்
டைரக்டர் தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“அண்மை காலமாகவும் கடந்த காலங்களிலும் என் உருவ படங்களை பயன்படுத்தியும், என் பெயரை பயன்படுத்தியும் சமூக வலைத்தளத்தில் போலிச் செய்திகள் உலவுகின்றன. சாத்தான் குளம் இரட்டைக் கொலை” குறித்த என் பெயரில் உலவும் செய்தி ஒன்றினை நண்பர் அனுப்பி வைத்திருந்தார்.

இன்றுவரை இக்கொலைகள் குறித்த எந்த கருத்தையும் நான் தெரிவிக்காத நிலையில் இதை வெளியிட்டவர் தண்டனைக்கு உள்ளாவார். இணைய கூலிகள் அதிகரித்துள்ள இவ்வேளையில் இதுபோன்ற செய்திகளை இனிமேலும் கண்டுகொள்ளாமல் இருந்தால் என் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும் என உணர்ந்தபடியால் இந்த இறுதி எச்சரிக்கையை விடுக்கின்றேன்.

நான் பேசினாலும், எழுதினாலும், அறிக்கை விடுத்தாலும் எனது கைப்பேசி எண்களிலிருந்து இயங்கும் வாட்ஸ் அப் எனது டுவிட்டர், முகநூல் இவைகளில் மட்டுமே வெளிவரும்.

இனி என்னுடைய பெயரில் எந்த செய்திகள் வெளிவந்தாலும் அதை வெளிப்படுத்துபவர்கள் மேல் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.